ஸ்ரீமுஷ்ணம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


ஸ்ரீமுஷ்ணம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 7 April 2023 6:45 PM GMT (Updated: 8 April 2023 9:12 AM GMT)

ஸ்ரீமுஷ்ணம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

கடலூர்

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் அரசன்குட்டை தெருவில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீ மிதி திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அரசன்குட்டை தெரு பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.


Next Story