தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

தேவையற்ற வேகத்தடைகள்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியிலிருந்து முத்துசேர்வாமடம் வழியாக செல்லும் இளையபெருமாள் நல்லூர் வரை சுமார் 23 வேகத்தடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் இந்த சாலை வழியாக அவசர தேவைக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் கூட குறித்து நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தேவையற்ற வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், மீன்சுருட்டி.

சாலையின் நடுவே பள்ளம்

அரியலூர் தேரடியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் இணைப்பு சாலையின் நடுவே மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் பள்ளி மற்றும் முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

பயணிகள் அவதி

அரியலூரில் தற்காலிக பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று பெய்த மழையில் இந்த பஸ் நிலையம் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலை ஓரத்தில் பஸ்கள் நிறுத்தப்படுவதால் விபத்து அபாயமும் உள்ளது. எனவே பஸ் நிலையத்திற்குள் ஜல்லிக்கல் பரப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செல்லப்பாண்டி, அரியலூர்.


Next Story