தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தில் இருந்து பாகல்மேடு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ரெட்டிபாளையம் .

எழுத்து பிழையாக உள்ள விழிப்புணர்வு சுவரொட்டி

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உடற்பயிற்சி சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மருத்துவமனை வளாக பகுதியில் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. ஆனால் இந்த சுவரொட்டிகளில் எழுத்து பிழைகள் காணப்படுகின்றன. இதில் வாழ்க்கையில் என்பதற்கு பதிலாக வாங்க்கையில் என்று தவறாக அச்சிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், சிலுவைச்சேரி கிராமம் சிவன்கோவில் தெருவில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வான நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது அவற்றின் மீது மின்கம்பிகள் உரச அதிக வாய்ப்பு உள்ளது. எனவே விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சிலுவைச்சேரி.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவின் மேல் தளத்தில் அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் அறையில் நோயாளிகள் தங்கி மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த வார்டுகளில் மின் விசிறி கடந்த சில நாட்களாக இயங்கவில்லை. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின்விசிறிகளை சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், அரியலூர்.

தெருநாய்களால் தொல்லை

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி செல்கின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், செந்துறை.


Next Story