தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கடைவீதி பகுதியில் இருந்து கீரமங்கலம் மேற்கு, குளமங்கலம் செல்லும் பட்டவைய்யனார் கோவில் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் இந்த சாலையில் செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகி வருகிறது. மேலும் இந்த சாலையில் உள்ள பட்டவைய்யனார் கோவில் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் நடக்க உள்ளதால் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரமங்கலம்.

குப்பைகளுக்கு தீ வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வுநிலை பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்களால் நகர் முழுவதும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அதனை வாகனங்கள் மூலம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தன. இந்த நிலையில் பணியாளர்கள் குப்பைகளை ஆங்காங்கே குவித்து வைத்து தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலாக காணப்படுகிறது. இதனால் முதியவர்கள், குழந்தைகள் மூச்சு விடமுடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கீரனூர்.

சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு தெற்குப்பட்டியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் ஒரு பகுதியில் சேதம் அடைந்து குடிநீர் வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தெற்குப்பட்டி.

சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள புள்ளான்விடுதி அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் அடியோடு பெயர்ந்து விழுந்தது. இன்னும் அப்படியே சுற்றுச்சுவர் சாய்ந்து கிடப்பதால் பள்ளிக்குள் விஷப்பூச்சிகள் மற்றும் கால்நடைகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புள்ளான்விடுதி.

துணைமின் நிலையத்தை புதுப்பிக்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருக்கும் துணைமின் நிலையம் போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. மேலும் துணைமின் நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளதால் பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து துணைமின் நிலையத்தை மறு சீரமைப்பு செய்து புதிய மின் மாற்றிகள் அமைத்து, துணைமின் நிலையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாடு.


Next Story