தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 July 2022 12:13 AM IST (Updated: 22 July 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி கருமண்டபம் செல்வநகர் 2-வது வீதியில் மின்சாரத் துறையினரால் மரக்கிளைகள் வெட்டப்பட்டு சாலை ஓரத்தில் கிடந்தன. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக கிடந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தினர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், செல்வநகர்.

சாலை விரிவாக்கப்பணிகள் விரைவில் முடிக்கப்படுமா?

திருச்சி விமான நிலையம் அருகே புதுதெரு பகுதியில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சாலை விரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலை பணிகள் நடைபெறுகின்றன என்று எந்த ஒரு எச்சரிக்கை அறிவிப்புகளும், தடுப்புகளும் சரியாக வைக்கப்படவில்ல. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இரவு நேரத்தில் விபத்து ஏற்படுகின்றது. இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை வடகாபுத்தூர்பிள்ளையார்கோவில் இடத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளனார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடகாபுத்தூர்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி மாநகராட்சி, புத்தூர் 26-வது வார்டு மேல வண்ணாரப்பேட்டை மதுரை வீரன் கோவில் முன்புறம் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்த கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மேல வண்ணாரப்பேட்டை.

பாதாள சாக்கடை மூடி அமைக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், தெரணிபாளையம் பெரியார் நகரில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவே கழிவுநீர் செல்ல வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள மூடிப்பகுதியில் மேல்மூடி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக நடந்து செல்லும் மக்கள் இந்த பள்ளத்தில் விழுந்து காயமடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தெரணிபாளையம்.


Next Story