தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

சேதமடைந்த சாலை

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நரசிங்கம்பட்டியில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிதாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள், மேலூர்.

விபத்து அபாயம்

மதுரை மாநகராட்சி 46-வது வார்டு லெட்சுமிபுரம் 3-வது தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மூடி உடைந்து கழிவுநீர் வெளியே செல்கிறது. மேலும் சாலையில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே கழிநீர் கால்வாய் மூடியை சரி செய்ய வேண்டும்.

மூர்த்தி, மதுரை.

நடவடிக்கை தேவை

மதுரை மாநகராட்சி கே.புதூர் கால்நடை மருத்துவமனை சம்பக்குளத்தில் சேதமடைந்த ஒரு சிறிய அறையில் செயல்பட்டு வருகிறது. கால்நடைகள் அதிகமுள்ள இப்பகுதியில் பெரிய கட்டிடத்தில் இருந்தால்தான் கால்நடை வளர்ப்போருக்கு பேருதவியாக இருக்கும். எனவே மருத்துவமனைக்கு போதிய வசதிகளுடன் புதிய கட்டிடத்தை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்சண்முகவேல், கே.புதூர்.

பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?

மதுரை மாவட்டம் 66-வது வார்டு கோச்சடை மெயின் ரோட்டில் மழை, வெயில் காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயணிகள் நிழற்குடை இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே இருக்கை வசதிகளுடன் கூடிய நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜன், கோச்சடை.

எரியாத தெருவிளக்கு

மதுரை மாநகராட்சி 9-வது வார்டு உத்தங்குடி முஸ்லிம் தெரு சந்திப்பு, கே.எம்.காலேஜ் தெரு சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியை இரவு நேரங்களில் கடந்து செல்ல பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், மதுரை.


Next Story