தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

சாலையில் தேங்கும் கழிவுநீர்

மதுரை தமுக்கம் மைதானம் நேரு சிலை பின்புறம் சாலை சேதமடைந்து காணப்படுவதுடன், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்கவும், சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்ணன், மதுரை.

ஆகாய தாமரைகள் ஆக்கிரமிப்பு

மதுரை பெத்தானியாபுரம், சிம்மக்கல் தரைப்பாலம், பேச்சியம்மன் படித்துறை உள்ளிட்ட வைகை ஆற்றுபகுதிகளில் ஆகாய தாமரைகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே ஆகாய தாமரைகளை அகற்றி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

ரமேஷ், மதுரை.

மாற்று இடத்தில் அமைக்கப்படுமா?

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் மேலவடம்போக்கி தெரு அருகில் குப்பை தொட்டி நிறைந்து கோவிலுக்கு வருபவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் மூக்கை பிடித்து செல்லும் நிலை காணப்படுகிறது. எனவே குப்பை தொட்டியை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சரவணன், மதுரை.

தேங்கி நிற்கும் மழைநீர்

மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே செல்லும் இடத்தில் மழை காலங்களில் மழைநீர் தேங்குகிறது. இதனால் பஸ்கள், நடைபாதையினர் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது. எனவே இப்பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

செந்தில், ஆரப்பாளையம், மதுரை.

நாய்களால் தொல்லைதினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

மதுரை விளாங்குடி ஐ.ஓ.சி. நகர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. குடியிருப்பு வாசிகள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் அச்சுறுத்தும் நாய்களால் குழந்தைகள், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா? பாலா, மதுரை.


Next Story