தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுரை

நடவடிக்கை தேவை

மதுரை மாவட்டம் சிம்மக்கல்லில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் பாலம் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரமேஷ், மதுரை.

தடுப்பணை கட்ட வேண்டும்

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஒன்றியம், பேரையூர் அருகே கூவலபுரம் மற்றும் சின்னையாபுரம் ஆகிய இரண்டு கிராமத்திற்கு இடையே உள்ள ஓடையில் தடுப்பணை கட்டுவதாக கூறி குழி தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தடுப்பணை கட்டும் பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்குமார், பேரையூர், மதுரை.

சேதமடைந்த மடைகள்

மதுரை மாவட்டம் அலப்பலசேரி இடையபட்டி கண்மாயை நம்பி ஏராளமான பாசன நிலம் உள்ளது. இந்த கண்மாயில் நீர் வெளியேறுவதற்கு உள்ள 3 மடைகளும் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மழை காலம் தொடங்க உள்ள நிலையில் மடைகளை சீரமைத்தால் பல கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்ப்பதுடன், விவசாயமும் செழிக்கும். எனவே இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், இடையபட்டி, மதுரை.

ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா ஆனைக்குட்டம் கிராமத்தில் நீர் பாசன கன்மாய் உள்ளது. இந்த கண்மாயில் செடிகள் அடர்ந்து காணப்படுகிறது. இதனால் விவசாயம் செய்யப்படும் நிலங்கள் நீரின்றி பாதிக்கப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கன்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுப்பார்களா?

சமயகருப்பு, மதுரை.

சாலை சீரமைக்கப்படுமா?

மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையம் உள்ளே செல்லும் பாதை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்சில் பயணிக்கும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், மாட்டுத்தாவணி, மதுரை.


Next Story