தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதயில் உள்ள பெண்கள், குழந்தைகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்கள் பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இளையான்குடி.
கால்வாய் தூர்வார வேண்டும்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரிய கண்மாய்க்கு செல்லும் காரைக்குடி டவுன் பெரிய கால்வாயில் மரங்கள் வளர்ந்தும் குப்பைகள் தேங்கியும் இருப்பதால் தண்ணீர் செல்வதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்பு கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், காரைக்குடி.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
சிவகங்கையிலிருந்து சுற்றுவட்டார கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் போதுமானதாக இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இந்த பகுதியில் கூடுதல் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, சிவகங்கை.
கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஒரு சில கண்மாயில் கருவேல மரங்கலால் ஆக்கிரமிப்பு நிறைந்துள்ளது. இதனால் இந்த கண்மாய்களில் தண்ணீரை சேமிப்பதில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே இந்த கண்மாய்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், சிங்கம்புணரி.
சேதமடைந்த சாலை
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றன. மேலும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், தேவகோட்டை.