'தினத்தந்தி' செய்தி எதிரொலி: சாலைகளில் சுற்றித்திரிந்த 50 மாடுகளை பிடித்த நகராட்சி ஊழியர்கள்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சாலைகளில் சுற்றித்திரிந்த 50 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
புதுக்கோட்டை
அறந்தாங்கி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிவதால் விபத்துகளும், உயிரிழப்புகளும் நடந்து வருகிறது. இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 31-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள சாலைகளில் சுற்றித்திரிந்த 50 மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்து அறந்தாங்கி எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரே உள்ள அரசு இடத்தில் அடைத்து மாடுகளை பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டபோது சாலைகளில் சுற்றித்திரிந்த 50 மாடுகளை பிடித்து பராமரித்து வருகிறோம். ஆனால் மாட்டின் உரிமையாளர்கள் ஒருவர் கூட வந்து மாட்டை மீட்கவில்லை என்றார்.
Related Tags :
Next Story