'தினத்தந்தி' செய்தி எதிரொலி: கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் பழுதான சுற்றுச்சுவர் சீரமைப்பு


தினத்தந்தி செய்தி எதிரொலி: கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் பழுதான சுற்றுச்சுவர் சீரமைப்பு
x
தினத்தந்தி 31 Dec 2022 12:15 AM IST (Updated: 31 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி காரணமாக கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் பழுதான சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

'தினத்தந்தி' செய்தி எதிரொலி காரணமாக கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் பழுதான சுற்றுச்சுவர் சீரமைக்கப்பட்டது.

பழுதான சுற்றுச்சுவர்

பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு தாலுகா 2012-ம் ஆண்டு தனியாக தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி கிணத்துக்கடவு தனி தாலுகாவாக செயல்பட தொடங்கியது. உடனடியாக தாலுகா அலுவலகம் செயல்பட போதிய கட்டிட வசதிகள் இல்லாததால் தற்காலிகமாக கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சொந்தமான இடத்தில் மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தில் செயல்பட தொடங்கியது. தற்போது இந்த தற்காலிக தாலுகா அலுவலக கட்டிடத்தில் 80-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதேபோல் தினசரி தாலுகா அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் கொடுப்பதற்கும், பல்வேறு விசாரணைகளுக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் வந்து செல்கின்றனர். தற்போது தாலுகா அலுவலகத்தில் முன்பக்கத்தில் உள்ள நுழைவுவாயில் சுற்று சுவர் விரிசல் ஏற்பட்டு பல நாட்களாக அந்தரத்தில் தொங்கி நின்று கொண்டிருந்தது.

சீரமைப்பு

இந்த சுவர் பழுதடைந்த நிலையில் பல நாட்களாக நின்றும் இதனை யாரும் கவனிக்காமல் அப்புறப்படுத்தாமல் இருந்ததால் கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்திற்கு பல்வேறு பிரச்சினைகள் குறித்து மனு கொடுக்க கொடுக்க வரும் நபர்கள் மரண பயத்துடன் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகம் வந்து சென்றனர். இதுகுறித்த செய்தி கடந்த செப்டம்பர் மாதம் 14-ந்தேதி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் வெளியானது. இந்தநிலையில் பழுதடைந்த சுவரை தற்போது வருவாய் துறையினர் சீரமைத்துள்ளனர். இதனால் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். பழுதடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Next Story