'தினத்தந்தி' செய்தி எதிரொலி:வைகை அணை பகுதி கடைகளில் அதிகாரிகள் சோதனை


தினத்தந்தி செய்தி எதிரொலி:வைகை அணை பகுதி கடைகளில் அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வைகை அணை பகுதி கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தேனி

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுகாதாரமற்ற உணவு பொருட்கள் விற்பனை, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தாராளமாக உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, பெரியகுளம் ஒன்றியம் முதலக்கம்பட்டி ஊராட்சி அருகே உள்ள வைகை அணை பகுதி கடைகளில் ஊராட்சி தலைவர் பிரபா மருதுபாண்டியன் தலைமையில் துணைத் தலைவர் முருகேஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா, ஊராட்சி செயலாளர் கோபால் மற்றும் உணவு பாதுகாப்பு, சுகாதாரத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது கடைகளில் இருந்த அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இனி வரும் காலங்களில் சுகாதாரமற்ற பொருட்கள் விற்பனை, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story