சொத்து பிரச்சனை: முதியவர் கழுத்து அறுத்து கொலை - பேரன் வெறிச்செயல்
திண்டுக்கல் அருகே சொத்து பிரச்சனை காரணமாக பேரனே தாத்தாவை கழுத்தை அறுத்து கொடூர கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் மருதை (வயது 80). இவருடைய மனைவி முத்தம்மாள் (75) இவருக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
மருதைக்கு ஒரு ஏக்கர் நிலம் இருந்துள்ளது. நீண்ட நாட்களாக இவர்கள் குடும்பத்திற்குள் சொத்து பிரச்சனை நடந்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் முருகேசனின் மூத்த மகன் சக்திவேல் (27) நேற்று நள்ளிரவில் மருதையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் சக்திவேல் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருதையை சராமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். ரத்த வெள்ளத்தில் மருதை துடி துடித்து இறந்துள்ளார்
அதிகாலை பொதுமக்கள் பார்த்து எரியோடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் தினம் தினம் கொலை சம்பவம் அறங்கேறி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. சொத்திற்காக பேரனே தாத்தாவை கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.