சென்னையில் இருந்து அயோத்திக்கு இன்று முதல் நேரடி விமான சேவை
தென்னிந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலுக்கு தினசரி செல்கின்றனர்.
சென்னை,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை விழா கடந்த 22-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அயோத்திக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலுக்கு தினசரி செல்கின்றனர்.
இந்நிலையில் சென்னை-அயோத்தி இடையேயான தினசரி விமான சேவையை மத்திய விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, இன்று தொடங்கி வைக்கிறார் .
இதன்படி சென்னை, மும்பை, பெங்களூர், ஆமதாபாத், பாட்னா, மும்பை, பெங்களூரு, ஜெய்ப்பூர் நகரங்களில் இருந்து அயோத்திக்கு தினசரி விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
முன்னதாக ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக அந்த நகரில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது