நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்
x

நெமிலி தாலுகாவில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

ராணிப்பேட்டை

நெமிலி

நெமிலி தாலுகா அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் பாலசந்தர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், நெமிலி தாலுகாவில் தற்போது நெல்அறுவடை தொடங்கி உள்ளது. எனவே, விவசாயிகள் நலன்கருதி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

ஆக்கிரமிப்பில் உள்ள ஏரிக்கால்வாய்களை மீட்டு தூர்வாரவேண்டும். நெமிலியில் வேளாண்மை சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். வேளாண்மை இடுபொருட்களை கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமங்கள்தோறும் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து பேசினர்.

கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பிரதிநிதி வெங்கடேசன், விவசாய சங்க பிரதிநிதிகள் சுபாஷ், கிருஷ்ணன் உள்பட விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story