திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்


திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 526 கிராம ஊராட்சிகளில் தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்க்கும் முகாம் இரு மாதங்களுக்கு ஒரு முறை 2-வது செவ்வாய்க்கிழமை கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னிலையில் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெறும். அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 4 மணி அளவில் திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் கூடுதல் ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட உள்ளது.

மேலும் அன்று காலை அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் பொது பிரச்சினைகள் குறித்த மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் முகாம்களில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து தீர்வுகண்டு பயன் பெறலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story