மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி: தமிழக அணி வெற்றி


மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி: தமிழக அணி வெற்றி
x

மாற்றுத்திறனாளிகளுக்கான தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது.

அரியலூர்

கிரிக்கெட் போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கான தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் போட்டி கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, பாண்டிச்சேரி ஆகிய 3 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடின. பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில் ராஜ்மகேஷ் தலைமையிலான தமிழ்நாடு அணியும், ரேஸ் தலைமையிலான கேரள அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.

இதையடுத்து, அரியலூர் மாவட்டம் கீழப்பழூரில் உள்ள தனியார் பள்ளியில் இறுதி போட்டி நடைபெற்றது.

தமிழக அணி வெற்றி

இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் 56 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது 6-வது விக்கெட் ஜோடி சேர்ந்த சன் மேக்கர், ரமேஷ் ஆகியோரின் அதிரடியால் தமிழக அணி 242 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சன் மேக்கர் 90 ரன்களும், ரமேஷ் 34 ரன்களும், அன்பன் 34 ரன்களும், ஷேக் 22 ரன்களும் எடுத்தனர். கேரள அணியை சேர்ந்த ஆஷிஷ் 4 விக்கெட்டுகளும், கரீம் 2 விக்ெகட்டுகளும் எடுத்தனர். 243 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கேரள அணி, தமிழக அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 154 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷபிக் 24 ரன்கள் எடுத்தார். தமிழக அணியை சேர்ந்த ஹரிஷ் மற்றும் தமிழ் தலா 3 விக்ெகட்டுகளும், ராஜ் மகேஸ்வரன், சந்தோஷ் குமார் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஆட்டநாயகன் விருதை சன் மேக்கர் பெற்றார்.


Next Story