பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகம்

பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகம்
x

கீழ்வேளூர் பேரூராட்சி வளாக பகுதியில் பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:

கீழ்வேளூர் பேரூராட்சி வளாக பகுதியில் பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகள் சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூட்டி கிடக்கும் சுகாதார வளாகம்

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி அலுவலகம் தெற்கு மடவிளாகம் தெருவில் உள்ளது. இதன் அருகே அட்சயலிங்கசாமி கோவில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் முக்கிய வணிக நிறுவனங்கள் உள்ளன. மாற்றுத்திறனாளிகளின் நலன்கருதி பேரூராட்சி வளாக பகுதியில் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் கட்டப்பட்டு 6 ஆண்டுகள் ஆகியும், இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. போதிய பராமரிப்பின்றி காணப்படுவதால் வளாகம் பூட்டிய நிலையில் காட்சி பொருளாக உள்ளது.

பயன்பாட்டிற்கு வருமா?

இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், அரசு அலுவலகங்களுக்கு வருபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவசரத்திற்கு சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் திறந்த வெளியை பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக கீழ்வேளூர் பேரூராட்சி வளாக பகுதியில் பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டு் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story