மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை


மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Sept 2023 2:30 AM IST (Updated: 17 Sept 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் எஸ்.குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பழையூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 45), மாற்றுத்திறனாளி. இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. தனது உடல்நிலையை குறித்து மகாலிங்கம் அடிக்கடி மனவேதனை அடைந்துள்ளார்.

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த மகாலிங்கம், வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story