சுற்றுலா செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்


சுற்றுலா செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்கள்
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுற்றுலா செல்லும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து அனுப்பிவைத்தார்

கோயம்புத்தூர்


கோவை

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஆரம்ப நிலைய பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும் செவித்திறன் குறைபாடு, கண்பார்வை குறைபாடு மற்றும் மன நலம் குன்றிய 36 மாற்றுத்திறனாளி மாணவ - மாண விகளை ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்யப் பட்டது.

அதன்படி நேற்று 36 மாற்றுத்திறனாளி மாணவர்கள் அவர்களின் பெற்றோரை 4 வாகனங்களில் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா அழைத்துச் சென்றனர்.

இந்த வாகனத்தை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சமீரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் முன்னிலை வகித்தார்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஒரு நாள் சுற்றுலாவாக போத்தனூர் மகாத்மா காந்தி அருங்காட்சியகம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர்.

இந்த சுற்றுலாவுக்காக ரூ.10 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சுற்றுலா சென்றதால் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story