மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி


மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
x

கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை


மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரிடம் இருந்து கேனை பறித்தனர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். போலீசார் விரைந்து வந்து மாற்றுத்திறனாளி பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், மதுரை நாகுநகரை சேர்ந்த சிறுமணியம்மாள் என்பவரின் மகள் கவிதா என தெரியவந்தது. அதாவது சிறுமணியம்மாள் தனியார் நிறுவனத்திடம் கடன் வாங்கி இருக்கிறார். அதற்கு அதிகப்படியான வட்டி விதிக்கப்பட்டு ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் வீட்டினை ஜப்தி செய்வோம் என்று தனியார் நிறுவனத்தினர் மிரட்டுவதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கவிதா தற்கொலை முயற்சி செய்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story