பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
வந்தவாசியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வந்தவாசி
வந்தவாசியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வந்தவாசி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு டாக்டர் காளிச்செல்வம் தலைமை தாங்கினார். அனைத்து வியாபாரிகள் சங்க பேரவை நிர்வாகி பி.டி.ஜி. ஆறுமுகம், ரெட் கிராஸ் சங்க உறுப்பினர் டாக்டர் ம.சுரேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பா.சீனிவாசன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட ரெட் கிராஸ் சங்க தலைவர் பா.இந்திரராஜன் பங்கேற்று, பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு தகவல்களை விளக்கினார். மேலும் உலக கை கழுவும் தினம் பற்றிய விழிப்புணர்வும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சங்க நிர்வாகிகள் சதானந்தன், மலர் சாதிக், பெ.பார்த்திபன், நூலகர் தமீம், வெங்கடேசன், வினோத்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு கையேடுகள் வினியோகம் செய்யப்பட்டது.