பேரிடர் மேலாண்மை வெள்ள தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி


பேரிடர் மேலாண்மை வெள்ள தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி
x

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை வெள்ள தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை வெள்ள தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

ஒத்திகை நிகழ்ச்சி

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள அபாயம் குறித்த ஒத்திகை பயிற்சி நடத்த அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி மாவட்டத்தில் தூத்துக்குடி முத்தம்மாள் காலனி, ஆத்தூர், புன்னக்காயல், கொங்கராயகுறிச்சி, வாலசமுத்திரம் ஆகிய இடங்களில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டி, தாசில்தார் செல்வக்குமார், மாநகராட்சி நகர்நல அலுவலர் அருண்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள், சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மீட்பு பணி

தொடர்ந்து வெள்ள அபாயம் குறித்த அபாய ஒலி எழுப்பப்பட்டது. உடனடியாக அந்த பகுதியில் உள்ள திருமூலர் பூங்காவில் இருந்து பொதுமக்கள் வெளியில் ஓடினர். உடனடியாக அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களை பத்திரமாக மீட்டு போல்பேட்டை தங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. மேலும் கட்டிடத்தின் மாடியில் தஞ்சம் புகுந்து இருப்பவர்களை மீட்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை படகுகளில் சென்று மீட்பது போன்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. அதே போன்று அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள், சேதம், பொருள், கட்டிடம், கால்நடை, பயிர் சேதம் குறித்து விவரங்களை சேகரிப்பது போன்ற ஒத்திகைகள் நடத்தப்பட்டன.

இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story