பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி
பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
எஸ்.புதூர், பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சென்னை முதல் கப்பலூர் வரை செல்லக்கூடிய பைப் லைன்களில் உள்ள கிராமப்புற மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவசர கால ஒத்திகை நடத்தி வருகின்றனர். அதன்படி கே.புதுப்பட்டியில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி, மண்டல துணை தாசில்தார் சிவராமன், எஸ்.புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதையொட்டி பெட்ரோல் செல்லும் பைப் லைன்களில் கசிவு ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மதுரை மண்டல முதன்மை செயல் மேலாளர் சிவகுருநாதன், முதுநிலை பராமரிப்பு மேலாளர் கார்த்திக்குமார், இளையான்குடி நிலைய மேலாளர் கவுதம் ஆகியோர் விளக்கினர். தீ விபத்து ஏற்பட்டால், எவ்வாறு கையாள்வது, அணைப்பது என்று சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறையினர் சார்பில் விளக்கப்பட்டது. காயம் அல்லது விபத்து ஏற்பட்டால் எவ்வாறு முதலுதவி செய்வது என்பது குறித்து மருத்துவத்துறையினர் சார்பில் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், வாராப்பூர் வருவாய் ஆய்வாளர் இளையராஜா, புழுதிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாசர், சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலைய அலுவலர் அருள்ராஜ், புழுதிபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.