கோத்தகிரி, குன்னூரில் பேரிடர் மீட்பு செயல் விளக்க பயிற்சி


கோத்தகிரி, குன்னூரில் பேரிடர் மீட்பு செயல் விளக்க பயிற்சி
x

கோத்தகிரி, குன்னூரில் பேரிடர் மீட்பு செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி, குன்னூரில் பேரிடர் மீட்பு செயல்விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

விழிப்புணர்வு பயிற்சி

கோத்தகிரி அருகே உள்ள குமரன் காலனி கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் அனைத்து அரசுத் துறைகள் சார்பில் மாவட்ட அளவிலான பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி நேற்று நடைபெற்றது. இதை உதவி கலெக்டர் முகமது குதரத்துல்லா தலைமை தாங்கி, தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலை துறை, மின்சார வாரியம், மருத்துவம் மற்றும் சுகாதார துறை, 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு பொதுமக்கள் மற்றும் பேரிடர் மீட்பு முதல் நிலை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில் புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், மண் சரிவு, கட்டிடங்கள் இடிந்து இடிபாடுகள் ஏற்படுவது போன்ற பேரிடர் காலங்களில் விபத்துக்களில் சிக்கி காயமடைந்தவர்களை பத்திரமாக எவ்வாறு மீட்பது, அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது, மீட்பு பணிகள் குறித்து செயல்முறை விளக்கம் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

மேலும் தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டு, பேரிடர்களில் காயமடைந்த இளைஞர் ஒருவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போல செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழைக்காலங்களில் மண் சரிவு போன்ற பல்வேறு பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த பேரிடர்களில் சிக்கி கொள்பவர்களை எவ்வாறு மீட்பது என்பதை குன்னூர் தீயணைப்புத் துறையினர் தத்துரூபமாக செயல் விளக்கம் அளித்து காண்பித்தனர். கடும் மழையினால் குன்னூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளத்தில் அடித்துச் சென்ற நபர்களை மீட்டு முதலுதவி அளித்து அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிப்பது என்பது குறித்து தத்ரூபமான செயல் விளக்கம் நடைபெற்றது.

இதில், மருத்துவத்துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், வருவாய்த் துறையினர், போலீசார், நெடுஞ்சாலைதுறையினர் என அனைவரும் உடனடியாக செயல்பட்டு காண்பித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை உண்மை என் நம்பி மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story