திருத்தணியில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை


திருத்தணியில் தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை
x

திருத்தணியில் தீயணைப்பு துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடத்தினர்.

திருவள்ளூர்

திருத்தணி தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தின் சார்பில், பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேல் திருத்தணி பகுதியில் உள்ள நல்லாங்குளத்தில் நேற்று பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி நடந்தது.

இதில், தீயணைப்பு மீட்பு பணி நிலைய அலுவலர் அரசு தலைமையில், தீயணைப்பு பணியாளர்கள் வெள்ளத்தில் அடித்து செல்பவர்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து ஒத்திகை பயிற்சி செய்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் மழை நீரால் தாழ்வான பகுதிகளில் பாதிப்பு உண்டாகும்போது பொதுமக்கள் தங்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாட்டர் கேன், தண்ணீர் குடம், வாட்டர்பாட்டில், மூங்கில், தர்மாகோல், லாரி ட்யூப், வாழைமரம் ஆகிய பொருட்களை கொண்டு எவ்வாறு தற்காத்து கொள்வது என குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் திருத்தணி ஆர்.டி.ஓ. ஹஸ்ரத்பேகம், தாசில்தார் வெண்ணிலா, வருவாய் ஆய்வாளர் கமல், வி.ஏ.ஒ. டில்லி பாபு, வார்டு கவுன்சிலர் மகேஸ்வரி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story