பேரிடர் மீட்பு ஒத்திகை


பேரிடர் மீட்பு ஒத்திகை
x

பேரிடர் மீட்பு ஒத்திகை நடந்தது.

அரியலூர்

அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று அரியலூர்-பெரம்பலூர் ஒருங்கிணைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பேரிடர் சமயங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீயை எவ்வாறு அணைக்க வேண்டும், சாலையில் முறிந்து விழுந்து மரத்தை எவ்வாறு அகற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை செய்து காண்பித்தனர். அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா தலைமையில் நடைபெற்ற இந்த பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டு பேரிடர் மீட்பு குறித்து தெரிந்து கொண்டனர்.


Next Story