பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி


பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
x
தினத்தந்தி 3 Sep 2023 6:45 PM GMT (Updated: 3 Sep 2023 6:45 PM GMT)

சின்னசேலம் ஏரியில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

வடகிழக்கு பருவ மழை தொடங்க இருப்பதை அடுத்து வெள்ளப்பெருக்கு, ஏரி, குளம், ஆறு, அணைக்கட்டு போன்ற நீர் நிலைகளில் எதிர்பாராத விதமாக ஆபத்துகளில் சிக்கியவர்கள், இயற்கை இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சின்னசேலம் தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி அங்குள்ள பெரிய ஏரியில் நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம், முன்னணி மீட்பு வீரர்கள் ஆனந்தகுமார், ராமச்சந்திரன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் சின்னசேலம் ஏரியில் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடும் நபரை எவ்வாறு மீட்பது என்பதை ஒத்திகை நடத்தி காண்பித்தனர். இதை சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன் பார்வையிட்டார். இதில் வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, உதவியாளர் ராமசாமி, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் நயினார்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் செம்பாக்குறிச்சி கிராம எல்லை அருகே வனப்பகுதியில் உள்ள அணைக்கட்டில் வருவாய்த் துறையினரின் முன்னிலையில் பேரிடர் மீட்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.


Next Story