பேரிடர் கால ஒத்திகை பயிற்சி


பேரிடர் கால ஒத்திகை பயிற்சி
x
தினத்தந்தி 28 Jun 2023 12:30 AM IST (Updated: 28 Jun 2023 4:08 PM IST)
t-max-icont-min-icon

இளையான்குடியில் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி நடந்தது.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி தீயணைப்பு துறையினர் பேரிடர் கால ஒத்திகை பயிற்சியினை இளையான்குடி புறவழிச் சாலையில் நடத்தினர். வரும் மழைக்காலத்தில் பேரிடர் கால உதவிகளை செய்ய ஏதுவாக இளையான்குடி தீயணைப்புத்துறை நிலை அலுவலர் பிரகாஷ் தலைமையிலான தீயணைப்பு துறை அதிகாரிகள் ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டார்கள். அங்குள்ள குளத்தில் மூழ்கி நபரை உயிருடன் பாதுகாப்பது பற்றிய பயிற்சியை பொது மக்களிடையே செய்து காண்பித்தார்கள். இளையான்குடி தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆபத்து காலங்களில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தங்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர். எந்த நேரத்திலும் அழைப்பு வந்தவுடன் பொதுமக்களுக்கு உதவ காத்திருக்கின்றோம். வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தீயணைப்பு துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story