நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றினால் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்


நீர்நிலைகளில் கழிவுநீரை வெளியேற்றினால் நடவடிக்கை: மாசு கட்டுப்பாட்டு வாரியம்
x

உரிமம் பெற்ற லாரிகளின் மூலம் மட்டுமே கழிவுநீரை அகற்றவேண்டும் என தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை மற்றும் புறநகர்களில் கழிவுநீரை நீர் நிலைகள் மற்றும் காலி இடங்களில் டேங்கர் லாரிகள் மூலம் சட்டவிரோதமாக வெளியேற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. அந்த லாரிகள் மீது மோட்டார் வாகன தடுப்பு சட்டத்திபடி உரிமம் ரத்துசெய்ய பரிந்துரைக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான புகார்கள் வந்தால், வாரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

உரிமம் இல்லாத லாரிகள் மூலம் கழிவுநீரை வெளியேற்றுவதால், அவை அடையாறு, கூவம், மற்றும் புறநகரில் உள்ள நீர்நிலைகளில் கலந்து நீர் நிலைகள் மாசுபடுகிறது. சுத்திகரிக்க ஏதுவாக உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து தகுந்த உரிமம் பெற்ற லாரிகளின் மூலம் அகற்றவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story