பெரியகுளம் நகராட்சியில் வரி செலுத்ததாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


பெரியகுளம் நகராட்சியில் வரி செலுத்ததாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x

பெரியகுளம் நகராட்சியில் வரி செலுத்ததாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தேனி

பெரியகுளம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை உடனடியாக செலுத்த வேண்டும் என்று நகராட்சி சார்பில் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நாள்தோறும் நகராட்சி பணியாளர்கள் 30 வார்டுகளுக்கும் சென்று 2022-23-ம் ஆண்டிற்கான வீட்டு வரி, குழாய் வரி, பாதாள சாக்கடை இணைப்பு வரி, தொழில்வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களை வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இன்று நகராட்சி வருவாய் ஆய்வாளர் தலைமையில் நகராட்சி பணியாளர்கள், வரி வசூலிப்போர் கொண்ட குழுவினர் கடைவீதி பகுதியில் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நீண்ட காலமாக வரி செலுத்தாமல் உள்ளவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்புகளை துண்டித்தும், பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டித்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story