சங்கராபுரம் பகுதியில்வரி பாக்கி செலுத்தாத 42 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்புபேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


சங்கராபுரம் பகுதியில்வரி பாக்கி செலுத்தாத 42 வீடுகளின் குடிநீர் இணைப்பு துண்டிப்புபேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-13T00:16:25+05:30)

சங்கராபுரம் பகுதியில் வரி பாக்கி செலுத்தாத 42 வீடுகளின் குடிநீர் இணைப்பை பேரூராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.

கள்ளக்குறிச்சி


சங்கராபுரம்,

சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு வசிக்கும் சிலர் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர், சொத்து வரியை கடந்த பல ஆண்டுகளாக கட்டாமல் பாக்கி வைத்துள்ளனர். குடிநீர், சொத்து வரி பாக்கியை உடனே செலுத்துமாறு பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் அறிவுறுத்தியும், வரிபாக்கியை செலுத்தாமல் உள்ளனா். இந்த நிலையில் சங்காரபுரம் பேரூராட்சியில் வரி பாக்கி வைத்துள்ளவர்களின் குடிநீர் இணைப்புகளை செயல் அலுவலர் உத்தரவின்பேரில் பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் துண்டித்து வருகிறார்கள். அந்த வகையில் சங்கராபுரம் பேரூராட்சியில் வரி பாக்கி வைத்திருந்த 42 பேரின் வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்பை பேரூராட்சி இளநிலைஉதவியாளர் ஜெயப்பிரகாஷ், வரி தண்டலர் புவனேஸ்வரி ஆகியோர் தலைமையிலான ஊழியர்கள் துண்டித்தனர்.


Next Story