திருப்பத்தூர் அரசு கல்லூரியில் 'இந்தியா - 2047' கலந்துரையாடல் நிகழ்ச்சி


திருப்பத்தூர் அரசு கல்லூரியில் இந்தியா - 2047 கலந்துரையாடல் நிகழ்ச்சி
x

திருப்பத்தூர் அரசு கல்லூரியில் ‘இந்தியா - 2047’ கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு கல்லூரியில் 'இந்தியா - 2047' கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

திருப்பத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்திய அரசின் நேரு யுவகேந்திரா மற்றும் சேஞ்ச் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்திய இந்திய-2047 குறித்த இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தியது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் வரவேற்றார். துணைத்தலைவர் ஹரி பிரபாகரன், பேராசிரியை உமா, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் இந்திய நாட்டின் வளர்ச்சிக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையாடல் நடந்தது.

முடிவில் தொண்டு நிறுவன இயக்குனர் சரஸ்வதி நன்றி கூறினார்.


Next Story