பள்ளியில் மாணவர்களின் கற்றல் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடல்
ஆரணி ராமச்சந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவர்களின் கற்றல் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமச்சந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளியில் 2023-2024-ம் கல்வி ஆண்டில் மாணவர்களின் கற்றல் குறித்து பெற்றோர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி அறக்கட்டளை தலைவர் ஆர்.சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமார், செயலாளர் சொர்ணாம்பிகை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் பெவில் கொலின் பிரையன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் வரும் கல்வி ஆண்டில் பள்ளியில் செயல்படுத்தப்படும் விதிமுறைகள் மற்றும் கல்வி செயல்பாடுகள், தனித்திறமைகள், மாணவர்களின் படைப்பாற்றல், விளையாட்டு பயிற்சிகள், விடைத்தாள்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை, ஆசிரியர்களின் தனித்திறமைகள், பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து பெற்றோர்களுக்கு விளக்கப்பட்டது.
மேலும் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் செயல்பாடுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவும் பள்ளி செயலி குறித்தும், மாணவர்கள் தயக்கமின்றி ஆங்கிலத்தில் பேச (English partner) உடன் இணைந்து செயல்படுகின்றனர் என்பதையும் விளக்கினர். மேலும் மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கற்றல் மேம்பாட்டிற்கு பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.