போளூர் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து வியாபாரிகளுடன் கலந்துரையாடல்

போளூர் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து வியாபாரிகளுடன் கலந்துரையாடல்
x

போளூர் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி மன்றத்தில் நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை

போளூர்

போளூர் பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை குறித்து வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரூராட்சி மன்றத்தில் நேற்று கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரிஜ்வான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சாந்தி நடராஜன், பண்ணையார் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழத்தர் முகமது இஷாத் வரவேற்றார்.

பேரூராட்சி மன்ற தலைவர் ராணி சண்முகம் கலந்து கொண்டு பேசும்போது, ''வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போளூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக்கை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்று கூறினார்.

தமிழ்நாட்டில் திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பயிற்சி அளிப்பதற்காக போளூர் உள்பட 6 பேரூராட்சிகளை தேர்ந்தெடுத்து உள்ளனர்.

அடுத்த வாரம் 50- ஊர்களில் இருந்து வரும் நபர்களுக்கு போளூர் பேரூராட்சி மன்றம் மூலம் திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது'' என்றார். நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், பொதுமக்கள் வியாபாரிகள் கலந்து கொண்டனர் முடிவில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

Next Story