கழிவுநீர் லாரி உரிமையாளரை மிரட்டி மாமூல் கேட்ட 2 போலீசார் பணியிடைநீக்கம் - போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு


கழிவுநீர் லாரி உரிமையாளரை மிரட்டி மாமூல் கேட்ட 2 போலீசார் பணியிடைநீக்கம் - போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
x

கழிவுநீர் லாரி உரிமையாளரை மிரட்டிய ஆடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் கழிவுநீர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆனந்தனின் கழிவுநீர் லாரி ஆத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கழிவுநீரை ஏற்றிக்கொண்டு செங்கல்பட்டு-காஞ்சீபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அந்த லாரியை செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர்கள் நிர்மல்குமார் மற்றும் இளவரசன் ஆகியோர் வழிமறித்து, லாரி டிரைவரை மிரட்டி, உரிமையாளரின் செல்போன் எண்ணை வாங்கி மாமூல் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இந்த ஆடியோ பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது தொடர்பாக ஆனந்தன், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆடியோ பதிவுடன் புகார் செய்தார். இதையடுத்து போலீஸ்காரர்கள் நிர்மல்குமார் மற்றும் இளவரசன் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனித் உத்தரவிட்டார்.


Next Story