பெண் விற்பனையாளர் பணியிடை நீக்கம்


பெண் விற்பனையாளர் பணியிடை நீக்கம்
x
சேலம்

சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இருந்து அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் விக்டர் ஜேம்ஸ், அம்மாப்பேட்டையை சேர்ந்த சாதிக் பாட்ஷா, வாழப்பாடி சுப்ரமணியம், குகை நடேசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுடன் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையின் விற்பனையாளரான முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயந்திமாலா (வயது 45) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், கைதான ஜெயந்திமாலாவை பணியிடை நீக்கம் செய்து பள்ளப்பட்டி கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க துணைப்பதிவாளர் முத்துவிஜயா உத்தரவிட்டார்.


Next Story