லஞ்சம் வாங்கிய தாட்கோ அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம்
கறவை மாடு கடன் வழங்க லஞ்சம் வாங்கிய தாட்கோ அலுவலக ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
விழுப்புரம்
லஞ்சம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த குணசீலன் மனைவி பாரதி, அப்பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் தனக்கும், தன்னுடன் உறுப்பினராக இருக்கும் 13 பேருக்கும் தாட்கோ மூலம் கறவை மாடு கடன் பெறுவதற்காக விழுப்புரம் தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை சரிபார்த்து கறவை மாடு கடன் வழங்க தாட்கோ மாவட்ட மேலாளருக்கு பரிந்துரை செய்வதற்காக அங்குள்ள அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணியாற்றி வரும் விழுப்புரம் அருகே ராம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார்(வயது 35) என்பவர் கடந்த 3-ந் தேதியன்று ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது அவரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ஊழியர் பணியிடை நீக்கம்
தொடர்ந்து அங்குள்ள அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களையும், கணக்கில் வராத ரூ.34 ஆயிரத்தை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தாட்கோ அலுவலக பதிவறை எழுத்தர் சுரேஷ்குமாரை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து நேற்று சென்னை தாட்கோ மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.