தாமிரபரணி ஆற்றில் 4 டன் பழைய துணிகள் அகற்றம்; தூய்மை பணியை கலெக்டர் பார்வையிட்டார்

தாமிரபரணி ஆற்றில் 4 டன் பழைய துணிகள் அகற்றம்; தூய்மை பணியை கலெக்டர் பார்வையிட்டார்
x

சேரன்மாதேவி் தாமிரபரணி ஆற்றில் நேற்று நடந்த தூய்மைப் பணிகளை கலெக்டர் காா்த்திகேயன் பார்வையிட்டார். இப்பணியின்போது 4 டன் பழைய துணிகள் அகற்றப்பட்டன.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி் தாமிரபரணி ஆற்றில் நேற்று நடந்த தூய்மைப் பணிகளை கலெக்டர் காா்த்திகேயன் பார்வையிட்டார். இப்பணியின்போது 4 டன் பழைய துணிகள் அகற்றப்பட்டன.

தூய்மை பணி

மீண்டும் மஞ்சள் பை இயக்கத்தின் ஒரு பகுதியாக சேரன்மாதேவியில் புனித தலமான பக்தவச்சல பெருமாள் கோவில் அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் நேற்று தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நெல்லை நீர்வளம் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இப்பணியில் ஈடுபட்டனர். இப்பணியை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்டு, மரக்கன்றுகள் நட்டு ஆலோசனை வழங்கினார்.

4 டன்

தூய்மை பணியின்போது ஆற்றில் பொதுமக்கள் விட்டுச் சென்ற 4 டன் பழைய துணிகள் அகற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வம், சேரன்மாதேவி தாசில்தார் விஜயா, துணை தாசில்தார் சீதாதேவி, சேரன்மாதேவி பேரூராட்சி தலைவி தேவி, பேரூராட்சி செயல் அலுவலர் காதர், கிராம நிர்வாக அலுவலர் இதயக்கனி, ஏட்ரி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், தன்னார்வலர் அமைப்பினர் சபேசன், நெய்னா முகம்மது, லூர்து, கவின் கலைக் கழகம் சிவராமகிருஷ்ணன், மாரியப்பன், வீராசாமி, ஆசிரியர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story