விளையாட்டு மைதானத்தில் கிடந்த குப்பைகள் அகற்றம்
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக விளையாட்டு மைதானத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்
கோவை
கோவை நேரு உள்விளையாட்டு மைதானம் எதிரே மாநகராட் சியின் கட்டுப்பாட்டில் கூடைப்பந்து மைதானம் உள்ளது. இங்கு விளையாட்டு வீரர்கள் தினமும் பயிற்சி பெறுவார்கள்.
அதோடு மாவட்ட, மாநில, அகில இந்திய அளவிலான போட்டிகள் நடத் தப்படுகிறது. இந்த மைதானத்தின் அருகே கடந்த ஒரு வாரமாக பாக்குமட்டை தட்டு, பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடந்தன.
ஆனால் அவை அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசியது. இதனால் அங்கு பயிற்சி பெறும் விளையாட்டு வீரர்கள் அவதிப்பட்டனர். இது குறித்து 'தினத்தந்தி'யில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது.
இதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, அங்கு தேங்கிக் கிடந்த குப்பைகளை நேற்று உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுத்தனர். மேலும் அங்கு நோய் பரவலை தடுக்கும் வகையில் பிளீச்சிங் பவுடரும் தூவப்பட்டது. இதை பார்த்து பயிற்சி பெற வந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கூறுகையில், கூடைப்பந்து மைதானத்தில் விளையாடுவதற்கு இடையூறாக வும், துர்நாற்றம் வீசும் வகையிலும் குப்பைகள் தேங்கிக் கிடந் தது.
இந்த அவலத்தை சுட்டிக்காட்டும் வகையில் 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. அதை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மற்றும் 'தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றனர்.