மண் அள்ளியதில் தகராறு; இருதரப்பினர் மோதல்


மண் அள்ளியதில் தகராறு; இருதரப்பினர் மோதல்
x
தினத்தந்தி 9 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலம் அருகே மண் அள்ளியதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் மோதி கொண்டனர்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கூடலூர் ஊராட்சி கொசக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் என்ற மலைராஜ் (வயது 52) இவரது குடும்பத்திற்கு சொந்தமான கோவில் இடத்தில் உள்ள மண்ணை வீடு கட்டுவதற்காக அவரது உறவினரான இதே ஊரைச் சேர்ந்த தென்னரசு மகன்கள் சரவணன் (39) வடிவேல் முருகன்(42) ஆகியோர் அள்ளியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் முருகேசனை அவதூறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. முருகேசன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சரவணன், வடிவேல் முருகன் மீதும், இதுபோல் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் முருகேசன் மீதும் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story