திருக்கோவிலூாில் விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கரைப்பு
திருக்கோவிலூாில் விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்
திருக்கோவிலூர் நகரில் வைக்கப்பட்டிருந்த 8 விநாயகர் சிலைகள் லாரி, மினிலாரி உள்ளிட்ட வாகனங்களில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அந்த சிலைகள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அரகண்டநல்லூர் அருகே அந்திலி ஏரியில் கரைக்கப்பட்டது. அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சத்யன், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் திருக்கோவிலூரை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்ட 101 சிலைகள் அந்தந்த பகுதி நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.
Related Tags :
Next Story