கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் வினியோகம்


கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் வினியோகம்
x

விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது என்று கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் யசோதாதேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

விழுப்புரம்,

2022-23-ம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்களும் ஆகிய 3 சான்றிதழ்களுடன் கூடிய கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு பயிற்சியாளர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டுக்கான பயிற்சி விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் ரூ.100 ரொக்கமாக செலுத்தி நேரில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 1.8.2022 மாலை 5.30 மணிக்குள் கிடைக்குமாறு கூரியர் மற்றும் பதிவு தபால் மூலமாக மட்டுமே விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

ஒரு வருடம்

இதற்கு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் ஒரு வருடம், கட்டணம் ரூ.18,850 ஆகும்.

மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 2/1006 எல்லீஸ்சத்திரம் சாலை, திருச்சி மெயின்ரோடு, வழுதரெட்டி, விழுப்புரம் என்ற முகவரியிலோ அல்லது 04146-259467 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story