பிளஸ்2 தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இன்றுமுதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம்


பிளஸ்2 தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இன்றுமுதல் மதிப்பெண் பட்டியல் விநியோகம்
x
தினத்தந்தி 12 May 2023 2:37 AM GMT (Updated: 12 May 2023 4:02 AM GMT)

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியில் விநியோகம் செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடந்தது. இதற்கான தேர்வு முடிவு கடந்த 8-ந்தேதி வெளியானது. பிளஸ்-2 தேர்வில் 94 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இந்த நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் பட்டியில் விநியோகம் செய்யப்படுகிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.


Next Story