பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வினியோகம்


பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வினியோகம்
x

சுரண்டை அருகே பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கப்பட்டது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை எஸ்.வேலாயுத நாடார் கோமதி அம்மாள் (எஸ்.வி.ஜி) அறக்கட்டளை மற்றும் சுரண்டை நாடார் வாலிபர் சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிவகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது.

நாடார் வாலிபர் சங்க கவுரவ தலைவர் எஸ்.வி.கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.வி.ராமர், நிர்வாகிகள் அண்ணாமலை கனி, ஏ.கே.எஸ்.டி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ராஜலட்சுமணன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் கே.டி.பாலன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் 350-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சுரண்டை வியாபாரிகள் சங்க நிர்வாகி எம்.ஏ.துரை, சுரண்டை நகர பா.ஜ.க. நிர்வாகி கே.வி.கோகுல் கண்ணன், எம்.எஸ்.அய்யப்பன், சிற்றரசு, நாடார் வாலிபர் சங்க நிர்வாகிகள் சி.எம்.சங்கர், எஸ்.எம்.முருகன், ஜெயராம், பாலவிக்னேஷ், சிவமுருகன், கபிலன், ரவிக்குமார், நெல்லை கண்ணன், செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாடார் வாலிபர் சங்க துணை செயலாளர் கணபதி முருகன் நன்றி கூறினார்.Next Story