மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வினியோகம்
மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது.
அரியலூர்
செந்துறை:
அரியலூர் மாவட்டம், செந்துறை கூட்டுறவு அலுவலகம் மூலம் இலங்கைச்சேரி கிராமத்தில் இயங்கி வரும் ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று முதல் கலைஞரின் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்களை வீடு வீடாக வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் செந்துறை வட்டாரத்தில் அனைத்து கிராமங்களிலும் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோர் வீடுகளுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சென்று கணக்கு எடுத்து, விண்ணப்ப படிவங்களை வழங்கினர். விண்ணப்பத்தில் பயனாளிகளின் முழு விவரமும் குறிப்பிடப்பட்டு, அதிகாரிகளிடம் அளிக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story