கோவையில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை


கோவையில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை
x
தினத்தந்தி 24 Sep 2022 7:45 AM GMT (Updated: 2022-09-24T13:20:11+05:30)

பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

கோவை,

கோவையில் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாக மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது.

கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்கணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

கோவை மற்றும் தமிழகம் முழுவதும் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் இது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.


Next Story