தூத்துக்குடியில் சிறப்பாக கால்நடை வளர்த்த விவசாயிகளுக்கு விருதுகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடியில் சிறப்பாக கால்நடை வளர்த்த விவசாயிகளுக்கு விருதுகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் சிறப்பாக கால்நடை வளர்த்த விவசாயிகளுக்கு விருதுகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிறப்பாக கால்நடை வளர்த்த விவசாயிகளுக்கு விருதுகளை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பண்டாரம்பட்டியில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது முகாமுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழுநீக்கம், செயற்கை முறைகருவூட்டல், சினைப்பரிசோதனை, மலட்டு நீக்க சிகிச்சை, ஆண்மைநீக்கம், கோழிக்கழிச்சல் தடுப்பூசி, வெறிநோய் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் மொத்தம் 1019 கால்நடைகளுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. கால்நடைகளுக்கு நோய் பரவாத வகையில் தடுப்பதற்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டது.

விருது

முகாமில் கலந்து கொண்ட அனைத்து கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கு தாது உப்புக்கலவைகளும் வழங்கப்பட்டன. மேலும், கலெக்டர் செந்தில்ராஜ், சிறந்த கிடேரி கன்றுகளுக்கான பரிசுகளை 3 பேருக்கும், சிறந்த கால்நடை வளர்ப்போர்க்கான மேலாண்மை விருதுகள் 3 பேருக்கும் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து கால்நடை வளர்ப்போருடன் கலந்துரையாடினார்.

முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சு.சஞ்சீவிராஜ், துணை இயக்குநர்.ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர்கள் சங்கரநாராயணன், ஜாண்சுபாஸ், மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், கால்நடை வளர்ப்போர்கள் கலந்து கொண்டனர்.

Next Story