இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாடு


இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாடு
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட மாநாடு நடந்தது.

கரூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட மாநாடு வெங்கமேட்டில் நடைபெற்றது. மாநாட்டிற்கு நேதாஜி தலைமை தாங்கினார். சந்தானம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பெரியசாமி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் ரத்தினம்வேல் அறிக்கை சமர்பித்து பேசினார். மாநாட்டில் 31 தோழர்கள் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டனர். புதிய மாவட்ட செயலாளராக நாட்ராயன் தேர்வு செய்யப்பட்டார்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கரூர் நகரத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும், கரூர் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேலப்பாளையம் -கோயம்பள்ளி பாலத்தை உடனே திறக்க வேண்டும், குளித்தலை அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட வேண்டும். க.பரமத்தியை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story