மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்


மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்
x

ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் 25-ந் தேதி நடக்கிறது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளரும், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில், ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், சிப்காட் பாரதி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட அவை தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி தலைமையில் நடக்கிறது.

கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா, உறுப்பினர் சேர்த்தல், கட்சியின் ஆக்க பணிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் உள்ளாட்சி நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story